Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய ராணுவத்துக்கு டிரோன்களை விற்பனை செய்ய தக்சா குழு ஒப்பந்தம்

இந்திய ராணுவத்துக்கு டிரோன்களை விற்பனை செய்ய தக்சா குழு ஒப்பந்தம்

By: Nagaraj Thu, 10 Aug 2023 06:57:24 AM

இந்திய ராணுவத்துக்கு டிரோன்களை விற்பனை செய்ய தக்சா குழு ஒப்பந்தம்

சென்னை: டிரோன்கள் விற்பனை செய்ய ஒப்பந்தம்... நடிகர் அஜித்குமாரின் தக்சா குழு இந்திய ராணுவத்துக்கு டிரோன்களை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் அஜித்குமாரை ஆலோசகராக கொண்டு உருவாக்கப்பட்ட தக்சா விமானத் தொழில்நுட்பக் குழுவினர் இந்திய ராணுவத்துக்கு 200 டிரோன்களை 165 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

army,drones,supply,ajith adviser,team,govt ,ராணுவம், டிரோன்கள், சப்ளை, அஜித் ஆலோசகர், குழு, அரசுக்கு உதவி

ஆட்டோமொபைல் ஆர்வலரான நடிகர் அஜித்குமார், விமானியாகவும் உரிமம் பெற்றுள்ளார்.ஏரோநாட்டல் பொறியியலில் ஈடுபாடு கொண்டிருக்கும் அவர் பயிற்சி மாணவர்களுடன் தக்சா என்ற நிபுணர் குழுவை அமைத்தார்.

கோவிட் காலங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருந்து தெளிக்க டிரோன்களைப் பயன்படுத்தி அரசுக்கு இக்குழு உதவி செய்துள்ளது.இப்போது இக்குழு ராணுவத்துக்கு டிரோன்களை சப்ளை செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|
|