Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆப்கனில் கருத்தடை உபகரணங்களுக்கு தடை விதித்த தாலிபான்கள்

ஆப்கனில் கருத்தடை உபகரணங்களுக்கு தடை விதித்த தாலிபான்கள்

By: Nagaraj Sun, 19 Feb 2023 2:34:39 PM

ஆப்கனில் கருத்தடை உபகரணங்களுக்கு தடை விதித்த தாலிபான்கள்

ஆப்கானிஸ்தான்: கருத்தடை உபகரணங்களுக்கு தடை... ஆப்கானிஸ்தான் நாட்டில் கருத்தடை உபகரணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு பெண்களுக்கான உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களில் கருத்தடை சாதனங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

prohibition,afghanistan,taliban,devices,contraception ,தடை விதிப்பு, ஆப்கானிஸ்தான், தாலிபன்கள், சாதனங்கள், கருத்தடை

கருத்தடை மாத்திரைகளை இருப்பு வைத்திருக்கக் கூடாது என தாலிபான்கள் உத்தரவிட்டு உள்ளனர். மருந்தகங்களில் அப்போது சோதனையும் நடைபெறும் என்றும் சோதனையின் போது கருத்தடை மாத்திரைகள் மற்றும் சாதனங்கள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர் .

தற்போது காபூல் மற்றும் மஸார் - இ ஷெரிஃப் ஆகிய இரண்டு நகரங்களில் மட்டும் இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் விரைவில் நாடு முழுவதும் தடை விரிவுபடுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Tags :