Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய அமைச்சருடனான பேச்சுவார்த்தை... போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்ற மல்யுத்த வீரர்கள்

மத்திய அமைச்சருடனான பேச்சுவார்த்தை... போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்ற மல்யுத்த வீரர்கள்

By: Nagaraj Fri, 09 June 2023 06:04:03 AM

மத்திய அமைச்சருடனான பேச்சுவார்த்தை... போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்ற மல்யுத்த வீரர்கள்

புதுடில்லி: மத்திய அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து தற்காலிகமாக மல்யுத்த வீரர்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வரும் 15ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் மீது பெண் மல்யுத்த வீரர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. அவரை உடனடியாக கைது செய்யக்கோரி மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டங்களை தொடங்கினர். ஒரு கட்டத்தில் நாட்டுக்காக வாங்கிய பதக்கங்களை கங்கையில் வீசவும் முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்த மல்யுத்த வீரர்களில், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் பலர் ரயில்வே பணிக்குத் திரும்பினர். இந்நிலையில், மல்யுத்த வீரர்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரை சந்தித்து சுமார் 6 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக், ஜூன் 15ம் தேதிக்குள் போலீஸ் விசாரணை முடிவடையும் என்று அமைச்சர் உறுதியளித்தார். அதுவரை போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக கூறியுள்ளனர்.

struggle,temporary,warriors,withdrawal,wrestling , தற்காலிகம், போராட்டம், மல்யுத்தம், வாபஸ், வீரர்கள்

மல்யுத்த வீரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறுமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாகவும், அதை அவர் ஏற்றுக் கொண்டதாகவும் விளையாட்டு வீரர்கள் தெரிவித்துள்ளனர். பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஜூன் 15ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தொடரும் என்றும் மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூன் 30ம் தேதி நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார். மல்யுத்த வீரர்களுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜூன் 15ம் தேதிக்குள் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றார்.

3 ஆண்டுகள் நிறைவு பெற்ற மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் மற்றும் அவரது குழுவினரை மீண்டும் தேர்வு செய்யக்கூடாது என்று வீரர்கள் கோரிக்கை விடுத்ததாக கூறிய அனுராக் தாகூர், வீரர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Tags :