Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை விரைவில் மூடப்பட உள்ளது; பேராசிரியர் தகவல்

ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை விரைவில் மூடப்பட உள்ளது; பேராசிரியர் தகவல்

By: Nagaraj Tue, 09 June 2020 08:00:56 AM

ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை விரைவில் மூடப்பட உள்ளது; பேராசிரியர் தகவல்

''ஜெர்மனியின் கொலோன் பல்கலையில், தமிழ் துறை விரைவில் மூடப்பட உள்ளது,'' என, பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் கூறினார்.

தமிழ் வளர்ச்சித் துறை, உலக தமிழாராய்ச்சி நிறுவன அயல்நாட்டு தமிழர்புலம் சார்பில், 'அயல்நாடுகளில் தமிழாய்வுகள்' என்ற தலைப்பில், இணையவழி கருத்தரங்கம் நடந்தது. இதில், ஜெர்மனி, கொலோன் பல்கலை தமிழ் துறை பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் பேசியதாவது:

ஜெர்மனி நாட்டின், கொலோன் பல்கலையின், தமிழ் துறையில், 40 ஆயிரம் தமிழ் நுால்களுடன் நுாலகம் இருக்கிறது. இங்குள்ள தமிழ் துறையில், சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை ஆராயப்படுகிறது. ஜெர்மனியில் உள்ள, இலங்கை தமிழர்கள் உட்பட, வெளிநாட்டினருக்கும், இந்தத் துறை தமிழ் கற்பித்து வருகிறது.

germany,research,minister,university,tamil language ,ஜெர்மனி, ஆய்வு, அமைச்சர், பல்கலைக்கழகம், தமிழ்த்துறை

இதுபோல், பல்வேறு சேவைகளை செய்து வரும் இந்த தமிழ்துறை, தற்போது மூடப்படும் சூழலில் உள்ளது. அதை மீட்டெடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், பாண்டியராஜன் பேசியதாவது: அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில், தமிழ் இருக்கை அமைக்க, 10 கோடி ரூபாயை, தமிழக அரசு வழங்கியது. ஆனால், வெளிநாட்டு பல்கலைகளில் தமிழ் இருக்கை அமைப்பது உள்ளிட்ட, தமிழ் சார்ந்த பணிகள், விரைவாக நடப்பதில்லை. இதனால், தமிழகத்தில் உள்ளவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தற்போதைய சூழலில் அனைத்து துறைகளிலும், 20 சதவீதம் செலவுகள் குறைக்கப்பட்டு உள்ளன.

இருப்பினும் வெளிநாடுகளில் தமிழ் புலங்களை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளை செயல்படுத்த முடியும். கொலோன் பல்கலை தமிழ் துறை பிரச்னை குறித்து, ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags :