Advertisement

இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல்

By: vaithegi Tue, 21 Mar 2023 10:15:59 AM

இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல்

சென்னை: வேளாண் பட்ஜெட் தாக்கல் ..... அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் , இன்று தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் ...

நேற்று 2023-24- ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதனை அடுத்து இந்த பட்ஜெட்டில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், மக்களால் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட மகளீருக்கான உரிமை தொகை பற்றிய அறிவிப்பும் வெளியானது. இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு என்று பல்வேறு அறிவிப்புகள் வெளியானது.

budget,legislature ,பட்ஜெட் ,சட்டப்பேரவை

இந்த நிலையில், அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள், இன்று தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று 2-வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

Tags :
|