Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பயிர்க்காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசுக்கு தமிழக வேளாண் ஆணையர் கடிதம்

பயிர்க்காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசுக்கு தமிழக வேளாண் ஆணையர் கடிதம்

By: vaithegi Wed, 15 Nov 2023 2:35:46 PM

பயிர்க்காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசுக்கு தமிழக வேளாண் ஆணையர் கடிதம்

சென்னை: காவிரியில் இருந்து உரிய நீரை பெற முடியாத காரணத்தினாலும், எதிர்பார்த்த மழைப்பொழிவு இல்லாத காரணத்தினாலும் காவிரி டெல்டாவில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தங்களின் சம்பா நெற்பயிர் சாகுபடி பணிகளை தாமதமாகவே தொடங்கி உள்ளனர்.

இதையடுத்து தீபாவளி பண்டிகை காலம், இணைய சேவை மையங்களில் தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களால் 60 முதல் 70 சதவிகிதம் வரையிலான விவசாயிகள் மட்டுமே தற்போது வரை பயிர் காப்பீடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

central government,tamil nadu commissioner of agriculture,crop insurance , மத்திய அரசு, தமிழக வேளாண் ஆணையர்,பயிர்க்காப்பீடு


இச்சூழலில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனை நீட்டிக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் பயிர்க்காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கவும் மத்திய அரசுக்கு தமிழக வேளாண் ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.இந்த சூழலில் திருவாரூர் மாவட்டத்தில் 2.13 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்க் காப்பீடு செய்யப்பட்டுள்ளது . இன்றே பயிர்க் காப்பீடு செய்ய கடைசி நாள் என்பதால் திருவாரூரில் பயிர்க் காப்பீடு விவரங்களை வேளாண்துறை வெளியிட்டுள்ளது.

Tags :