Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்

By: vaithegi Sun, 26 Nov 2023 10:25:40 AM

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்

சென்னை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 27-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதையடுத்து இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 29-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

rainy,tamil nadu,puducherry ,மழை ,தமிழகம் ,புதுச்சேரி

இதனை அடுத்து நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதேபோன்று வருகிற 01ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Tags :
|