Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகம், புதுச்சேரியில் வருகிற 24, 25, 26 ஆகிய நாட்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்

தமிழகம், புதுச்சேரியில் வருகிற 24, 25, 26 ஆகிய நாட்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்

By: vaithegi Sun, 23 Apr 2023 10:17:16 AM

தமிழகம், புதுச்சேரியில் வருகிற 24, 25, 26 ஆகிய நாட்களிலும்  மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் மிகவும் சுட்டெரித்து வந்த நிலையில்,வளிமண்டல கீழடுக்கு சுயற்சி காரணமாக தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுயற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அதன்படி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும்

rainy,puducherry,tamil nadu ,மழை ,தமிழகம், புதுச்சேரி

மேலும் கள்ளக்குறிச்சி, வேலூர், தருமபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, சேலம் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தமிழகம், புதுச்சேரியில் 24, 25, 26 ஆகிய நாட்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மேலும், தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
|