Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை முதல் வருகிற 11-ம் வரை தமிழ்நாடு மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவும்

நாளை முதல் வருகிற 11-ம் வரை தமிழ்நாடு மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவும்

By: vaithegi Tue, 07 Feb 2023 4:32:03 PM

நாளை முதல் வருகிற 11-ம் வரை தமிழ்நாடு மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவும்

சென்னை: பிப்ரவரி 8,9,10,11 போன்ற தினங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் ..... தமிழகத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. இந்த பருவமழையின் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. அதன் பிறகு உருவான மாண்டாஸ் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்தது.

இதையடுத்து ஒரு வழியாக இந்த வடகிழக்கு பருவமழை கடந்த ஜனவரியில் முடிவுக்கு வந்தது.அதன் பிறகு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையும் காலை நேரங்களில் பனிப்பொழிவும் நிலவியது. இந்த நிலையில் கடந்த வாரம் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

dry weather,tamil nadu,puduvai ,வறண்ட வானிலை, தமிழ்நாடு ,புதுவை

எனவே இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மன்னர் வளைகுடா பகுதியில் வலுவிழந்தது. இந்நிலையில் இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தென் தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பிப் 8,9,10,11 போன்ற தினங்களில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :