Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உரிய நேரத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும்; தலைமை தேர்தல் ஆணையம் உறுதி

உரிய நேரத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும்; தலைமை தேர்தல் ஆணையம் உறுதி

By: Nagaraj Thu, 19 Nov 2020 09:59:45 AM

உரிய நேரத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும்; தலைமை தேர்தல் ஆணையம் உறுதி

உரிய நேரத்தில் தமிழகத்தில் தேர்தல்... கொரோனா தொற்று அச்சுறுத்தல் இருந்தாலும் தமிழகத்தில் சரியான நேரத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உறுதிபட கூறியுள்ளார்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் பீகார் சட்டமன்ற தேர்தலை தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இதையடுத்து அடுத்தகட்ட சவாலாக, தமிழகம், மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு, அடுத்த ஆண்டு மே-ஜூன் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.

sunil arora,tamil nadu,assembly election,appropriate time ,சுனில் அரோரா, தமிழகம், சட்டமன்ற தேர்தல், உரிய நேரம்

இதுகுறித்தும், பீகார் தேர்தல் அனுபவங்கள் குறித்தும் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, கொரோனாவுக்கு மத்தியில் நடந்த பீகார் தேர்தல், தங்களுக்கு கடினமான மற்றும் சவாலான பணியாக இருந்ததாவும், எனினும் வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் என்பது வழக்கமாக நடைபெறும் ஒரு நடைமுறை என்றும், அந்த விஷயத்தில் தாங்கள் ஒருபோதும் ஓய்ந்திருக்க மாட்டோம் எனவும் சுனில் அரோரா கூறியுள்ளார். அந்தவகையில் அடுத்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நடைபெறும் தேர்தல்களும் சரியான நேரத்தில் நடத்தப்படும் எனவும் சுனில் அரோரா உறுதியளித்துள்ளார்.

அவற்றுக்கான உள்ளார்ந்த பணிகளை தேர்தல் தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளதாகவும் சுனில் அரோரா கூறியிருக்கிறார்.

Tags :