Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன் பங்கேற்பு

விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன் பங்கேற்பு

By: Monisha Fri, 18 Dec 2020 1:27:10 PM

விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன் பங்கேற்பு

விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் எல். முருகன் பங்கேற்க உள்ளார். மத்திய அரசின் விவசாயிகள் சந்திப்பு திட்டத்தின்படி நாளை 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவள்ளூர், நாகை ஆகிய மாவட்டங்களில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செல்கிறார்.

அதன்படி நாளை பெரம்பலூர் மாவட்டம் குன்னம், அரியலூர் மாவட்டம் டி. பலூர், தஞ்சாவூர் மாவட்டம் திப்பிராஜபுரம், அம்மாபேட்டை, இரும்புத்தலை, கள்ளபெரம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளை எல். முருகன் சந்திக்கிறார்.

farmers,leader,tour,meeting,participation ,விவசாயிகள்,தலைவர்,சுற்றுப்பயணம்,கூட்டம்,பங்கேற்பு

20-ம் தேதி காலை தஞ்சாவூரில் நடைபெறும் விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில் மத்திய மந்திரி வி.கே. சிங் பங்கேற்கிறார். அன்றே ஒரத்தநாடு, தலையாமங்கலம், திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை, விக்கிரபாண்டியம் ஆகிய பகுதிகளில் கூட்டம் நடைபெறுகிறது.

21-ம் தேதி திருவாரூர் மாவட்டம் தில்லை விநாயகம், நாகை மாவட்டம் மருதூர், கீழையூர், கொள்ளிடம் பகுதியில் விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் எல். முருகன் பங்கேற்கிறார்.

Tags :
|
|