Advertisement

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 9-ம் தேதி

By: vaithegi Mon, 27 Feb 2023 6:43:00 PM

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 9-ம் தேதி

சென்னை: மார்ச் 9ம் தேதி முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் .... தமிழக அமைச்சரவைக் கூட்டம் வருகிற 9-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. தமிழக நிதிநிலை அறிக்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

எனவே அதன்படி, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட உள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான அமைச்சரவைக் கூட்டம் மார்ச் 9-ம் தேதி நடைபெற உள்ளது.

மார்ச் 9-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் துறை சார்ந்த அமைச்சர்கள், தலைமைச் செயலர் மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள் பங்கேற்கவுள்ளனர்.

cabinet meeting,chief minister ,அமைச்சரவை கூட்டம்,முதலமைச்சர்

இதையடுத்து பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான சட்டப்பேரவை எப்போது? என்பது பற்றி சபாநாயகர் இன்று மாலை அறிவிக்கிறார்.

மேலும் தமிழ்நாடு அரசின் 2023-24 நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கை, மார்ச் 3வது வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Tags :