Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று மாலை பீகாருக்கு புறப்படுகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இன்று மாலை பீகாருக்கு புறப்படுகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

By: vaithegi Thu, 22 June 2023 09:34:19 AM

இன்று மாலை பீகாருக்கு புறப்படுகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை பீகாரில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று புறப்படுகிறார் ...... வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அனைவரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்து உள்ளது.

இதனை அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக முனைப்பு காட்டி வரும் நிலையில் பாஜகவை எதிர்க்க ஒரு வலுவான எதிரணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்து கொண்டு வருகின்றனர். எனவே இதன் காரணமாக நாளை பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது.

cf minister m. k. stalin,bihar ,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,பீகார்

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முதல்வர் ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேம்நாத் சோரன், உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய அளவிலான எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பீகார் தலைநகர் பாட்னாவுக்கு இன்று மாலை தனி விமானத்தில் செல்கிறார். நாளை நடைபெறும் இந்த கூட்டத்தில் பாஜகவுக்கு எதிரான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Tags :