Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

By: vaithegi Mon, 13 June 2022 4:23:41 PM

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே உள்ள அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை 10 மணிக்கு 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்ற ஒளவையார் பாடலை மேற்கோள் காட்டி உரையாற்றினார். தாகத்தை தீர்க்கும் நீர் போல கல்வி தாகத்தை தீர்க்க எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் மூலம் குழந்தைகளின் எதிர்காலம் ஏற்றமடையும்.

"அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர் கல்வி என்பதே இந்த திராவிட மாடல் அரசினுடைய லட்சியமாக, கடமையாக அமைந்திருக்கிறது. அனைவருக்கும் கல்வி என்ற லட்சியத்திற்காகத்தான் திராவிட இயக்கமே உருவாகியிருக்கிறது. திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கமான சமூகநீதி என்பது கல்வித் தேவைக்காக உருவாக்கப்பட்டதுதான்" என்று மு.க.ஸ்டாலின் கூறினார்,

தமிழக அரசு கல்விக்கு மிகமிக முக்கியத்துவத்தைக் கொடுத்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு வருகிறது. அந்த அடிப்பைடையில், எண்ணும் எழுத்தும் என்கிற இந்த இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளதாக கூறினார்.

education for all,government of tamil nadu,counting and writing ,அனைவருக்கும் கல்வி, தமிழக அரசு,எண்ணும் எழுத்தும்

கொரோனா பெருந்தொற்றினால் பள்ளிகள் இரண்டா ண்டு காலமாக மூடப்பட்டிருந்த நிலையில், வகுப்பறையில் நேரடியாக குழந்தைகள் கல்வி கற்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் கற்றலில் ஒரு இடைவெளி ஏற்பட்டது. அதனை குறைக்கவும், குழந்தைகளின் கற்றல் ஆற்றலை அதிகப்படுத்தவும், எண்ணும் எழுத்தும் என்ற இந்த முன்னோடித் திட்டம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான படிப்புகள் மட்டும் போதாது. புதிய உத்தி தேவை என்பதை அரசு உணர்ந்ததன் அடிப்படையில்தான், இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழந்தையும் தனது கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

2025-ம் ஆண்டிற்குள் தமிழகத்தில் இருக்கின்ற 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும், பிழையின்றி எழுதவும், படிக்கவும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது என்பதும், எண்ணறிவு பெற்றவர்களாக திகழ வேண்டும் என்பதும் அரசின் இலக்கு. 2022-ம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும்" என்றும் அவர் கூறினார்.

Tags :