Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேட்டூர் அணையிலிருந்து தமிழக முதல்வர் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்து விடுகிறார்!

மேட்டூர் அணையிலிருந்து தமிழக முதல்வர் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்து விடுகிறார்!

By: Monisha Wed, 10 June 2020 11:15:16 AM

மேட்டூர் அணையிலிருந்து தமிழக முதல்வர் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்து விடுகிறார்!

மேட்டூர் அணை மூலம் காவிரி டெல்டா உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக அணை நீர் மட்டம் 90 அடிக்கு மேல் இருந்தால் மட்டும் ஆண்டு தோறும் ஜூன் 12-ம் தேதி அணையில் இருந்து நீர் திறக்கப்படும்.
கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதியில் குறித்த நாளில் டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்ட நிலையில், 11 ஆண்டுகள் கழித்து, நடப்பாண்டு வரும் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதால், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், ஆகஸ்ட் 13-ம் தேதி தான், பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. ஜனவரி 28-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. அணையில் இருந்து கடந்த ஆண்டு டெல்டா பாசனத்துக்கு 151 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட்டது.

mettur dam,cauvery delta,edappadi palaniswami,water opening ,மேட்டூர் அணை,காவிரி டெல்டா,எடப்பாடி பழனிசாமி,தண்ணீர் திறப்பு

கடந்த 2005, 2006-ம் ஆண்டுகளில் தொடர்ந்து 427 நாட்கள் அணை நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் இருந்தது. கடந்த 14 ஆண்டு களுக்குப் பின்னர் நடப்பாண்டு அணை நீர் மட்டம் தொடர்ந்து 301 நாட்களாக 100 அடிக்கு குறையாமல் இருந்து வருகிறது.

நடப்பாண்டு அணையில் தற்போது, 101.70 அடி நீர் மட்டம் உள்ளது. எனவே நடப்பாண்டு டெல்டா பாசனத்துக்காக நாளை மறுதினம் (12-ம் தேதி) தண்ணீர் திறக்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும், மேட்டூர் அணையில் இருந்து, நாளை மறுதினம் டெல்டா பாசனத்துக்கு தமிழக முதல்வர் பழனிசாமி தண்ணீர் திறந்து விடுகிறார். இதையொட்டி, அணை வளாகத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சேலம் மாவட்ட எஸ்பி தீபா கணிகர் நேற்று ஆய்வு செய்தார்.

Tags :