Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவிகளுக்கு எதிரான செயல்களை அரசு வேடிக்கை பார்க்காது ...தமிழக முதல்வர்

மாணவிகளுக்கு எதிரான செயல்களை அரசு வேடிக்கை பார்க்காது ...தமிழக முதல்வர்

By: vaithegi Tue, 26 July 2022 6:37:33 PM

மாணவிகளுக்கு எதிரான செயல்களை அரசு வேடிக்கை பார்க்காது ...தமிழக முதல்வர்

சென்னை: தமிழகத்தில் பாலியல் தொடர்பான பிரச்சினைகள் உயர்ந்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் குறிப்பாக பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு நடைபெறும் பாலியல் வன்முறை சம்பவங்கள் பல சந்தர்ப்பங்களில் வெளியே தெரிவதில்லை.

இதையடுத்து புகார் கொடுத்தாலும் பள்ளி நிறுவனங்கள் அதை முறையாக விசாரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு காலங்காலமாக நீடிக்கிறது. மேலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் தீர்ப்பு வருவதற்கு ஏற்படும் காலதாமதம் காரணமாக பலர் புகார் அளிக்க முன்வரவில்லை என்று வழக்கு நடத்திய சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கடந்த 2011ல் தமிழகத்தில் ஏற்கனவே மதுரை அரசு பள்ளி ஒன்றில் நடந்த பாலியல் துன்புறுத்தலில் 98 மாணவிகள் பாதிக்கப்பட்டனர். சென்ற ஆண்டில் சென்னை மாநகரில் தனியார் பள்ளிகளில் பாலியல் தொடர்பான புகார் எழுப்பப்பட்டது.

actions against,government,students , எதிரான செயல்கள்,அரசு , மாணவிகள்

மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் பாலியல் தொல்லை காரணமாக ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி உயிரிழப்பு என தொடர்ச்சியான பள்ளியில் பாலியல் துன்புறுத்தல் பிரச்னை நடைபெறுகின்றது.

இது போன்ற பாலியல் தொல்லையை கட்டுப்படுத்த புகார் குழுக்களை அமைக்கப்பட்ட வேண்டும் என 2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில் தற்போது சென்னை குருநானக் கல்லூரி பொன்விழாவில் உரையாற்றிய பொது முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் பள்ளியில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாணவிகளுக்கு எதிரான செயல்களை அரசு வேடிக்கை பார்க்காது என்றும், கொரோனா தொற்றால் எனது தொண்டை பாதிக்கப்பட்டு இருந்தாலும் தொண்டு பாதிக்கப்படவில்லை என்று முதல்வர் எச்சரித்துள்ளார்.

Tags :