Advertisement

தமிழக டிஜிபி பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

By: vaithegi Sat, 07 Jan 2023 6:58:34 PM

தமிழக டிஜிபி பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

சென்னை: பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ... தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மக்களுக்கு சாதகமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் இதன் வாயிலாக குற்றங்களும் உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக பண மோசடிகள் உயர்ந்து கொண்டே வருகிறது. வங்கி வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் வங்கி சார்ந்த விவரங்களை நூதன முறையில் பெற்று அதன் மூலம் அவர்களுக்கே தெரியாமல் வங்கி கணக்கிலிருந்து பணத்தை கையாடல் செய்து விடுகின்றனர்.

இதனை அடுத்து இது பற்றி தமிழக காவல்துறை டிஜிபி முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். அதாவது நீங்கள் வெளிநாட்டுக்கு அனுப்பிய பார்சல் திரும்ப வந்துள்ளது. ஏனெனில் இதில் சட்ட விரோதமான போதை பொருட்கள் உள்ளது என கூறி காவல்துறையில் இருந்து தொடர்பு கொள்வது போல் பேசுவர். இதை கேட்டு பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்து விடுகிறார்கள்.

dgp,instruction ,டிஜிபி ,அறிவுறுத்தல்

மேலும் இக்குற்ற சம்பவத்தில் இருந்து விடுபட நாங்களே வழக்கறிஞரை ஏற்பாடு செய்து தருகிறோம். அதற்கு கட்டணமாக ரூ. 1 லட்சம் தேவைப்படும். அதை உடனே நீங்கள் அனுப்பி வைக்க வேண்டும் என பணத்தை அபகரிக்க முயல்கின்றனர்.

இதையடுத்து இன்னும் சில நேரங்களில் 5 லட்சம் வேண்டும் என்று கூறி எளிதாக பணத்தை பறித்து விடுகின்றனர். கடந்த சில நாட்களாகவே இது போன்று 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். தேவையற்ற அழைப்புகளை ஏற்க வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags :
|