Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காவலர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் தமிழக டிஜிபி முக்கிய உத்தரவை பிறப்பிப்பு

காவலர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் தமிழக டிஜிபி முக்கிய உத்தரவை பிறப்பிப்பு

By: vaithegi Sat, 04 Feb 2023 3:27:06 PM

காவலர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் தமிழக டிஜிபி முக்கிய உத்தரவை பிறப்பிப்பு

சென்னை: தமிழக காவல் நிலைய பொறுப்பு நிலைய அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு முக்கிய உத்தரவு ..... தமிழகத்தில் காவலர்கள் விடுப்பு இன்றி தொடர்ந்து பணி புரிவதால் அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். எனவே இதனை கருத்தில் கொண்டு அவர்கள் உடல் நலத்தினை பேணி காத்திடவும் தங்கள் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடும் வகையிலும் தற்போது வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அளிக்கப்பட்டு கொண்டு வருகிறது.

இதையடுத்து இந்த அறிவிப்பு காவலர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து களப்பணியாற்றும் காவலர்களுக்கு உதவும் வகையில் அண்மையில் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது.

dgp,constables ,டிஜிபி ,காவலர்கள்

அதாவது இரவு நேரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களின் நடவடிக்கையை கண்காணிக்கும் நோக்கில் ‘ஸ்மார்ட் காவலர்’ என்ற செயலி பயன்பாட்டிற்கு வந்தது. இதனை அடுத்து தற்போது காவலர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் தமிழக டிஜிபி முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் வண்ணம் அவர்களது இறுதி சடங்கில் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சீருடையுடன் பங்கேற்று இறுதி மரியாதை செய்ய வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.

Tags :
|