Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கண்ணில் கருப்புத்துணி கட்டி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கண்ணில் கருப்புத்துணி கட்டி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

By: Nagaraj Mon, 31 July 2023 8:12:05 PM

கண்ணில் கருப்புத்துணி கட்டி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்: எண்ணை ஆலை விரிவாக்கத்திற்கு நிலம் கையகபடுத்தும் சிபிசிஎல் நிர்வாகத்தை கண்டித்தும், சாகுபடி பணிகளை மேற்கொள்ள சிட்டா அடங்கல் வழங்க வலியுறுத்தியும், நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகை மாவட்டம் நாகூர் அடுத்த பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் எண்ணை ஆலை நிறுவனம் இயங்கி வருகிறது. எண்ணை ஆலை விரிவாகத்திற்காக 31,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பனங்குடி, முட்டம் கோபுராஜபுரம் உத்தமசோழபுரம் உள்ளிட்ட இடங்களில் 1300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு அங்கு பணிகள் நடைபெற்று வருகின்றன.

oil plant,pending,panangudi,cbcl,sale ,எண்ணை ஆலை, காத்திருப்பு போராட்டம், பனங்குடி, சிபிசிஎல், விற்பனை

இந்நிலையில் மீதமுள்ள 400 ஏக்கர் நிலத்தை விவசாயிகள் தர மறுத்ததால், அதனை சிபிசிஎல் எண்ணை ஆலை நிர்வாகம் கையகப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர், நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சிட்டா அடங்கல் வழங்காமல் விவசாயிகளை இவ்வாண்டு விவசாயம் செய்யவிடாமல் வஞ்சிப்பதாக குற்றம் சாட்டிய, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், விற்பனை செய்யப்படாமல் உள்ள விவசாய விளைநிலங்களுக்கு உரிய விலை தந்தால் மட்டுமே அதனை சிபிசிஎல் ஆலைக்கு விற்பனை செய்வோம். இல்லையெனில் நிலம் கையகப்படுத்த குறுக்கு வழியை கையாளும் பனங்குடி சிபிசிஎல் எண்ணை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டத்தை வரும் 4ம் தேதி முதல் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.

Tags :
|