Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு

புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு

By: Nagaraj Thu, 22 Dec 2022 9:30:37 PM

புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பழைய பேருந்துகளுக்கு பதிலாக ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும். அதில் ஒரு பேருந்து 42 லட்சம் என்ற மதிப்பீட்டில் பிஎஸ்-5 வகை டீசல் பேருந்துகள் வாங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது: மாநகரப் போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்துக் கழகம் தவிர ரதக் கோட்டங்களுக்கு 420 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என முதலமைச்சர் பேரவையில் அறிவித்தார்.

distance,service,buses,new,purchased ,தொலைதூரம், சேவை, பேருந்துகள், புதியவை, வாங்கப்படும்

பழைய பேருந்துகளை கழிவு செய்து புதிய பேருந்துகளை வாங்க இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பழைய பேருந்துகளுக்கு பதிலாக ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும். அதில் ஒரு பேருந்து 42 லட்சம் என்ற மதிப்பீட்டில் பிஎஸ்-5 வகை டீசல் பேருந்துகள் வாங்கப்படும்.

அதில் 60 சதவீதம் பேருந்துகளை நகரப் பகுதிகளிலும், 40 சதவீத பேருந்துகள் தொலைதூர சேவைக்கும் பயன்படுத்தப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|