Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யுமாறு தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யுமாறு தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம்

By: vaithegi Thu, 23 June 2022 12:21:14 PM

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யுமாறு தமிழக  அரசு ஊழியர்கள் போராட்டம்

தமிழகம்: தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெற்ற பின் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. அரசு ஊழியர் உயிரிழந்தோர் ஆண் அல்லது பெண் இருந்தாலும் அவரது கணவர் அல்லது மனைவிக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டு வந்தது.

இதனால் ஏராளமானோர் ஊழியர்கள் பயன் பெற்று வந்தனர். அதுமட்டுமின்றி, பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஏராளமான சலுகைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்பட்ட பல நிதி சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டது.

government employees,struggle , அரசு ஊழியர்கள்,போராட்டம்


பின்னர் தமிழக அரசு ஊழியர்களுக்கு, புதிய ஓய்வூதியத் திட்டத்தை கடந்த 2003ஆம் காங்கிரஸ் அரசு அமல்படுத்தியது. புதிய ஓய்வூதிய திட்டமானது, ஊழியர்கள் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட பணத்தை பிடித்தம் செய்யப்பட்டு, பணி ஓய்வு பெறும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக வழங்கும் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது.

அதுமட்டுமின்றி, பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருக்கும் எந்த விதமான சலுகைகளும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லாத காரணத்தால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யுமாறு அரசு ஊழியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Tags :