Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜுலை மாதம் இலவச ரேஷன் பொருட்கள் வழங்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

ஜுலை மாதம் இலவச ரேஷன் பொருட்கள் வழங்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

By: Nagaraj Mon, 06 July 2020 2:20:00 PM

ஜுலை மாதம் இலவச ரேஷன் பொருட்கள் வழங்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

ஜுலை மாதம் இலவச ரேஷன் பொருட்கள் வழங்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது.

தமிழகத்தில் குடும்ப அட்டைகளுக்கு ஜூலை மாதம் இலவச அரிசி உள்ளிட்ட பொது விநியோகத் திட்ட பொருட்களை வழங்க ரூ.256 கோடியே 91 லட்சத்து 13ஆயிரத்து 420 நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6-ம் கட்டமாக ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு இலவசஅரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் ஆகியவை ஜூலை மாதத்துக்கும் வழங்கப்பட உள்ளது.

funding,july month,ration products,government of tamil nadu,govt ,
நிதி ஒதுக்கீடு, ஜுலை மாதம், ரேஷன் பொருட்கள், தமிழக அரசு, அரசாணை

இந்த பொருட்களைப் பெற இன்றுமுதல் 9-ம் தேதிவரை குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே வந்து டோக்கன் வழங்கப்படுகிறது. இதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் இலவச அரிசி, குடும்பஉறுப்பினர்கள் அடிப்படையில் வழங்கப்படும் சர்க்கரை ஆகியவற்றுடன் ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் பாமாயில் ஆகியவை வழங்கப்பட உள்ளன.

இதற்காக ரூ.256 கோடியே 91 லட்சத்து 13 ஆயிரத்து 420 ஒதுக்கும்படி உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் அரசுக்கு பரிந்துரைத்தார். இதை ஏற்ற தமிழக அரசு, அதற்கான நிதியை ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

Tags :