Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை அளிக்க உள்ளதாக அரசு தெரிவிப்பு

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை அளிக்க உள்ளதாக அரசு தெரிவிப்பு

By: vaithegi Thu, 01 Sept 2022 11:31:11 AM

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும்  வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை அளிக்க உள்ளதாக அரசு தெரிவிப்பு

சென்னை:நாடு முழுவதும் வேலைவாய்ப்பை உயர்ந்தும் வகையில் புதிய தொழிற்சாலைகள், தனியார் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குதல் போன்றவற்றின் மூலம் நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க வழிவகை செய்தது. மேலும் மாதந்தோறும் மாவட்ட வாரியாக தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படுகிறது.

எனவே அந்த வகையில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில், கல்வி, வயதுக்கான விதிகளை தளர்வு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் அரசின் விதியின் கீழ் 2011 ம் ஆண்டு முதல் வேலை வாய்ப்புகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு கொண்டு வருகிறது.

tamil nadu government,employment,disabled persons ,தமிழ்நாடு அரசு,வேலைவாய்ப்பு ,மாற்றுத்திறனாளி


மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற வயது வரம்பு 18-35 வரையும், மாற்றுத்திறனாளிகள், பட்டியலினத்தவர், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினருக்கு அதிகபட்சமாக, 45 வரையும் வயது இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து எட்டாம் வகுப்பு வரை கல்வித் தகுதியும், ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இந்த நிலையில் வேலைவாய்ப்பு திட்ட விதிகளில் இருந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்வு பற்றி மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சமாக, 55 வயது வரை வயது வரம்பை உயர்த்தியும்,8-ம் வகுப்பு வரை கல்வித் தகுதி இருக்க வேண்டும் என்ற விதியை நீக்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags :