Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்த திறனறி தேர்வு திட்டம் அறிமுகம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு

தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்த திறனறி தேர்வு திட்டம் அறிமுகம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு

By: vaithegi Wed, 03 Aug 2022 8:45:35 PM

தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்த திறனறி தேர்வு திட்டம் அறிமுகம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு

சென்னை: உலகில் உள்ள மொழிகளில் மிகவும் தொன்மையான மொழி தமிழ் மொழியாகும். தமிழ் மொழிக்கென்று உலகெங்கும் ஒரு தனி மரியாதை உள்ளது என்றால் அது மிகையாகாது. தமிழ் மொழி தமிழர்களுக்கு தாய்மொழியாக விளங்குகிறது. இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் தமிழ் மொழிக்கு தமிழ் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் தமிழ்ச் சங்க மாநாடு நடத்தப்படுகிறது. தமிழ் மொழியினை போற்றும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளும் தமிழக அரசு சார்பாக நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, மற்றும் கல்லூரிகளில் தமிழ் மொழிக்கு என்றும் தனி முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு என தனி சலுகைகள் வழங்கப்படுகிறது. தற்போது தமிழக அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு தனி மதிப்பெண் சலுகை வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது. தமிழ் மொழியை அண்டை நாடுகளில் உள்ளவர்களும் ஆர்வமுடன் கற்க விரும்புகின்றனர்.

tamil nadu govt,tamil language,proficiency test ,தமிழ்நாடு அரசு,தமிழ் மொழி ,திறனறி தேர்வு

இதை அடுத்து இத்தகைய சிறப்பு மிக்க தமிழ்மொழியை வளர்க்க தமிழக அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டு வருகிறது. அந்தவகையில் தமிழ் மொழியை போற்றும் வகையில் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள் ஆகியவற்றை நடத்தி தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் முயற்சி செய்து கொண்டு வருகிறது.

அதன்படி தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்தும் வகையில் திறனறித் தேர்வு திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1500 வழங்கப்படும் எனவும் இதற்காக ரூ.247 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags :