Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நவம்பர் 13 ஆம் தேதி பொது விடுமுறை என அறிவித்து தமிழக அரசு

நவம்பர் 13 ஆம் தேதி பொது விடுமுறை என அறிவித்து தமிழக அரசு

By: vaithegi Tue, 07 Nov 2023 10:16:06 AM

நவம்பர் 13 ஆம் தேதி பொது விடுமுறை என அறிவித்து தமிழக அரசு

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் விடுமுறை ...இந்தாண்டு தீபாவளி திருநாள் எதிர்வரும் 12.11.2023 (ஞாயிறு) அன்று வருகின்றது. தீபாவளி திருநாள் கொண்டாட்டத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் இடப்பெயர்வடைவார்கள். தீபாவளி நோன்பு திங்கள் அன்று கொண்டாடப்படுகிறது.

ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள், மாணவர்கள் சொந்த ஊரிலிருந்து ஞாயிற்றுக் கிழமை இரவே புறப்பட வேண்டிவுள்ளது. அனைவரும் குடும்பத்துடன் ஒரு நாள் கூடுதலாக செலவிடும் வகையில் 13.11.2023 (திங்கள்) அன்று தமிழ்நாடு அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டனர்.

tamil nadu government public holiday ,தமிழக அரசு, பொது விடுமுறை

இதையடுத்து வெளியூர் செல்லும் பொதுமக்கள், அலுவலர்கள், மாணவர்கள் நலன் கருதி தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான வரும் நவம்பர் 13 ஆம் தேதி திங்கட்கிழமை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் வரும் 18 ஆம் தேதியை பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நவம்பர் 13 ஆந்திராவிலும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags :