Advertisement

ஆந்திர நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம்

By: Nagaraj Thu, 10 Aug 2023 06:58:40 AM

ஆந்திர நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம்

சென்னை: தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 8 டி.எம்.சி தண்ணீரை திறக்கக் கோரி ஆந்திர நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

சென்னையின் குடிநீர் தேவைக்காக நடப்பு பருவத்தில் திறக்கப்பட வேண்டிய 8 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீரை முறைப்படி திறக்கக் கோரி ஆந்திர நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

department of water resources,correspondence,current,government of tamil nadu,krishna river water ,நீர்வளத்துறை, கடிதம், நடப்பு, தமிழக அரசு, கிருஷ்ணா நதி நீர்

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி, ஆண்டுதோறும் 12 டி.எம்.சி தண்ணீர் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறக்கப்பட வேண்டும்.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சியும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சியும் வழங்கப்பட வேண்டும். இந்நிலையில் நடப்பு பருவத்தில் திறக்கப்பட வேண்டிய 8 டி.எம்.சி தண்ணீரில் 4 டி.எம்.சிக்கும் குறைவாகவே வந்திருப்பதால், முறைப்படி நீர் திறக்கக் கோரி தமிழக நீர்வளத்துறை செயலாளர் ஆந்திர நீர்வளத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Tags :