Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு வழங்கும் சலுகைகளை பெற ஆதார் எண் கட்டாயமாகும் ... தமிழ்நாடு அரசு அறிவிப்பு

அரசு வழங்கும் சலுகைகளை பெற ஆதார் எண் கட்டாயமாகும் ... தமிழ்நாடு அரசு அறிவிப்பு

By: vaithegi Fri, 16 Dec 2022 6:24:05 PM

அரசு வழங்கும் சலுகைகளை பெற ஆதார் எண் கட்டாயமாகும்  ... தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: ஆதார் எண் கட்டாயமாகும் ... நாடு முழுவதும் உள்ள மக்களின் அடிப்படை அடையாள ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை இருக்கிறது. மேலும் தமிழகத்தில் வங்கி கணக்கு தொடங்குவது முதல், குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பது வரை ஆதார் அட்டை வைத்திருப்பது கட்டாயம் ஆகும். மேலும் ஆதாரில் உள்ள பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் சரியாக இருப்பது அவசியம் ஆகும்.

ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பது மூலம் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மூலமாக, மக்கள் எங்கிருந்தாலும் அருகில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக பொருள்கள் வாங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

aadhaar number,tamil nadu govt , ஆதார் எண் , தமிழ்நாடு அரசு

அது மட்டுமில்லாமல், தமிழக அரசு ஆதார் அட்டையை மின் இணைப்புடன் இணைக்க அறிவுறுத்தி இருக்கிறது. எனவே அதன் மூலம் மக்கள் தங்கள் உபயோகப்படுத்திய மின்சார அளவிற்கு மட்டும் மின்கட்டணம் செலுத்தினால் போதுமானது.

இதனை அடுத்து இந்நிலையில் தற்போது அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெற, அடையாள ஆவணமாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள் இந்த சலுகைகளை பெற, ஆதார் பெறும் வரை வேறு ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :