Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகளிர் உரிமை திட்டத்திற்கான உதவி மையங்கள் இன்று முதல் செயல்படும் .. தமிழ்நாடு அரசு அறிவிப்பு

மகளிர் உரிமை திட்டத்திற்கான உதவி மையங்கள் இன்று முதல் செயல்படும் .. தமிழ்நாடு அரசு அறிவிப்பு

By: vaithegi Tue, 19 Sept 2023 09:52:14 AM

மகளிர் உரிமை திட்டத்திற்கான உதவி மையங்கள் இன்று முதல் செயல்படும் ..  தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: உதவி மையத்தை அணுகலாம் .... மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளையொட்டி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15-ம் தேதி தொடங்கி வைத்தார். இதையடுத்து காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இச்சூழலில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இ சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தது.

government of tamil nadu,womens rights programme ,தமிழ்நாடு அரசு ,மகளிர் உரிமை திட்டம்

இதனை அடுத்து இச்சூழலில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் நேற்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து. தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டோருக்கு இன்று முதல் உதவி மையத்தை நாட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தேர்வான பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் தொகை வராமல் இருப்பது பற்றியும் புகார் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. நிராகரிக்கப்பட்ட 56.60 லட்சம் பேருக்கு காரணங்கள் இன்று முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும் . காரணங்களை அறிந்து கொள்ள முடியாதவர்கள் கோட்டாட்சியர் அலுவலகங்களை அணுகலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.

Tags :