Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க தமிழக அரசு உத்தரவு

ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க தமிழக அரசு உத்தரவு

By: vaithegi Sun, 14 Aug 2022 7:23:58 PM

ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க தமிழக அரசு  உத்தரவு

சென்னை :தமிழகத்தில் பணிக்காலத்தில் கூடுதல் கல்வி தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு கல்விக்கான ஊக்கத்தொகை வழங்குவது குறித்து தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு இருந்த நிலையில் தமிழகத்தில் அரசு பணியில் உள்ள ஊழியர்கள் தங்களது பணிக்காலத்தில் தேவையான கோரிக்கையை அரசிடம் வைத்து வருவார்கள். அவர்களின் கோரிக்கையில் உண்மை இருக்கும் பட்சத்தில் அரசு உடனடியாக ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப் படும்

அதே சமயம் ஊழியர்களின் கோரிக்கையில் உண்மை இல்லாத பட்சத்திலும், அல்லது அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் வேறு ஏதேனும் சிக்கல்கள் இருக்கும் பட்சத்தில் அவை நிராகரிக்கப்படுகிறது. மேலும் ஊழியர்களின் கோரிக்கையை அரசு நிராகரிக்கும் போதும் அல்லது தாமதிக்கும் போதும் ஊழியர்கள் போராட்டம் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.

salary,teacher , ஊதியம்,ஆசிரியர்

இந்நிலையில் பல ஆண்டுகளாக அரசு பணியில் இருக்கும் ஆசிரியர்கள் பணிக்காலத்தில் கூடுதல் கல்வித்தகுதியை பெற்றால் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கையை ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் அரசிடம் வைக்கப்பட்டுள்ளது.
இதனால் 10.03.2020க்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


மேலும் கூடுதல் கல்வி பெற அரசால் அனுப்பப்பட்டு இருந்தாலும் அல்லது கல்வி விடுப்பை பயன்படுத்தி கூடுதல் கல்வி பெற்றுஇருந்தால் அவர்களுக்கு ஊக்கத்தொகை இல்லை. அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாளில் இருந்து ஓய்வு பெறும் நாள் வரை இரண்டு முறை மட்டுமே கூடுதல் கல்விக்கான ஊக்கத்தொகையை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|