Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல் குவிண்டாலுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவு

நெல் குவிண்டாலுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவு

By: Nagaraj Wed, 31 Aug 2022 08:38:49 AM

நெல் குவிண்டாலுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: நெல் குவிண்டால் ஒன்றுக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அது எவ்வளவு என்று தெரியுங்களா?

சாதாரண நெல் ரகத்துக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 75-ம், சன்னரக நெல் ரகத்துக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100-ம் கூடுதல் ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 2022-23 காரீப் பருவத்தில், நெல் கொள்முதலுக்காக, தேவையான நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், விவாசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

rice variety,small variety,incentive,tamil nadu government,determination ,நெல் ரகம், சன்ன ரகம், ஊக்கத்தொகை, தமிழக அரசு, நிர்ணயம்

இந்நிலையில் 2022-23 பருவத்திற்கான நெல் கொள்முதலை, வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மேற்கொள்ள அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து வழக்கத்திற்கு மாறாக உபரி நீர் முன்பே திறக்கப்பட்டது. மேலும் நெல் கொள்முதலை, வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியே தொடங்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரிடம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து நெல் கொள்முதலை மேற்கொள்ள செப்டம்பர் 1ஆம் தேதி மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண நெல் ரகத்துக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2045 ஆகவும், சன்னக ரகம் நெல் ரகத்துக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2060 ஆகவும் மத்திய அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில் உற்பத்தியை பெஉர்க்கும் வகையிலும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு அரசும் ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. சாதாரண ரகத்திற்கு ரூ. 75-ம் சன்ன ரகத்துக்கு ரூ. 100-ம் கூடுதலாக வழங்க ஆணை பிறப்பித்துள்ளது.

Tags :