Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆன்லைன் விளையாட்டு ... புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியீடு

ஆன்லைன் விளையாட்டு ... புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியீடு

By: vaithegi Mon, 24 Apr 2023 2:20:24 PM

ஆன்லைன் விளையாட்டு ...   புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியீடு

சென்னை: புதிய விதிமுறைகள் அரசு வெளியீடு .... தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களில் ஈடுபடும் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக வழக்கு தொடரப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து இந்தாண்டு தான் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்து மசோதாவில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் மற்றும் ஆன்லைன் விளையாட்டினை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகள் 2023 என்கிற புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் மே 21- ம் தேதியிலிருந்து அமலுக்கு வர இருக்கிறது. இதையடுத்து இந்த விதிமுறைகளின் படி உள்ளூர் மற்றும் வெளியூர் விளையாட்டு நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களின் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.

tamil nadu govt,online games ,தமிழக அரசு,ஆன்லைன் விளையாட்டு


அதாவது, சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தின் செயலாளரிடம் ரூ.1 லட்சம் கொடுத்து பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம். இதனை அடுத்து இவ்வாறு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேற்பார்வையிட்டு அடுத்த 15 நாட்களுக்குள் செயலாளர் அந்த விண்ணப்பங்களை நிராகரிப்பு செய்யலாம் அல்லது ஏற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தவறான தகவல்களை கொடுத்து இந்த விண்ணப்பங்களை பதிவு செய்திருந்தால் அந்த விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்படும் எனவும், நிராகரிப்பு செய்யப்படுவதற்கு முன்பாகவே விண்ணப்பம் செய்த அந்நிறுவனத்திற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நிராகரிப்பு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தின் சார்பில் ஒரு நோட்டீஸ் அனுப்பப்படும். அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்ட 15 நாட்களுக்குள் நிறுவனத்தின் சார்பிலிருந்து பதில் அனுப்ப வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :