Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக அரசு பள்ளி மாணவியர்கள் ரூ.1000 ஊக்கத்தொகைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு பள்ளி மாணவியர்கள் ரூ.1000 ஊக்கத்தொகைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

By: vaithegi Sat, 25 June 2022 8:05:32 PM

தமிழக அரசு பள்ளி மாணவியர்கள் ரூ.1000 ஊக்கத்தொகைக்கு இன்று முதல்  விண்ணப்பிக்கலாம்

தமிழகம்: அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு இடைநிற்றலை தவிர்ப்பதற்காக மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உதவி திட்டத்தின் மூலமாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை இந்த கல்வியாண்டு முதலே அரசு அமல்படுத்தவுள்ளது. அதன்படி கூடிய விரைவில் அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயில இருக்கும் மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரசின் இந்த உதவித்தொகையை பெற விரும்பும் மாணவிகள் https://penkalvi.tn.gov.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதியான மாணவிகள் வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

incentives,government schools,students ,ஊக்கத்தொகை,அரசு பள்ளிகள்,மாணவிகள்

அதாவது, அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளி, நகராட்சி பள்ளி, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான மாணவிகள் தங்களது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், TC நகல் ஆகிய ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மாணவிகளின் சான்றிதழ்களை சரிபார்த்து சம்மந்தப்பட்ட துறைத்தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவிகள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்தவுடன் மாணவியர்கள் பதிவிடும் எண்ணிற்கு OTP எண் அனுப்பப்படும். கிட்டத்தட்ட 2.70 லட்சம் மாணவிகள் மாதந்தோறும் தமிழக அரசால் வழங்கவுள்ள ரூ.1000 ஊக்கத்தொகையை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :