Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சின்னத்திரை படப்பிடிப்புகளை நிபந்தனைகளுடன் நடத்த தமிழக அரசு அனுமதி!

சின்னத்திரை படப்பிடிப்புகளை நிபந்தனைகளுடன் நடத்த தமிழக அரசு அனுமதி!

By: Monisha Thu, 21 May 2020 4:09:19 PM

சின்னத்திரை படப்பிடிப்புகளை நிபந்தனைகளுடன் நடத்த தமிழக அரசு அனுமதி!

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு துறைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 19ம் தேதி முதல் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இதனால் சினிமா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதையடுத்து கடந்த வாரம் போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதேபோல் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கக்கோரி அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

small screen,shooting,tamilnadu government,film workers,antiseptic ,சின்னத்திரை,படப்பிடிப்பு,தமிழக அரசு,சினிமா தொழிலாளர்கள்,கிருமி நாசினி

இந்நிலையில், சின்னத்திரை படப்பிடிப்புகளை நிபந்தனைகளுடன் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் விபரம் வருமாறு:-

* படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் தவிர தொழில்நுட்ப கலைஞர்கள் முக கவசம் அணிய வேண்டும்.

* படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், சாதனங்கள் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும்.

* தடை செய்யப்பட்ட பகுதி மற்றும் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது.

* பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது.

Tags :