Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொருட்களை வாங்கும்போது சரக்கு மற்றும் சேவை வரிக்கான பில் ரசீதுகளை பொதுமக்கள் கேட்டு வாங்குமாறு தமிழக அரசு வலியுறுத்தல்

பொருட்களை வாங்கும்போது சரக்கு மற்றும் சேவை வரிக்கான பில் ரசீதுகளை பொதுமக்கள் கேட்டு வாங்குமாறு தமிழக அரசு வலியுறுத்தல்

By: vaithegi Wed, 27 July 2022 11:54:58 AM

பொருட்களை வாங்கும்போது சரக்கு மற்றும் சேவை வரிக்கான பில் ரசீதுகளை பொதுமக்கள் கேட்டு வாங்குமாறு தமிழக அரசு வலியுறுத்தல்

சென்னை: மாநிலங்களுக்கு இடையேயான ஜிஎஸ்டி (IGST), மாநிலங்களுக்கு இடையில் நடைபெறும் விற்பனையின் மூலம் வரும் வருவாய் ஒன்றியஅரசால் வசூலிக்கப்படும். யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவை வரி (UTGST), நாட்டின் எந்த யூனியன் பிரதேசத்திற்கும் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் பொருட்களை வாங்கும்போது சரக்கு மற்றும் சேவை வரிக்கான பில் ரசீதுகளை பொதுமக்கள் கேட்டு வாங்குமாறு தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. கடைகளில் பொருட்கள் வாங்கும் போது அதற்கான பில்லையும் பொதுமக்கள் கேட்டு பெற்றால் மட்டுமே அரசுக்கு ஜிஎஸ்டி வரி வருவாய் முழுமையாக அரசுக்கு கிடைக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

government of tamil nadu,tax ,தமிழக அரசு ,வரி

இந்நிலையில், பொதுமக்கள் ரசீதை கேட்டு பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக ‘எனது பில் எனது உரிமை’ என திட்டத்திற்காக ஒன்றரை கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் தாங்கள் பெறும் ஜிஎஸ்டி வரியுடன் கூடிய பில்லின் நகல்களை வணிகவரி துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள் என்றும், அவ்வாறு பதிவேற்றம் செய்யும் வாடிக்கையாளர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

Tags :