Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

By: vaithegi Thu, 16 Mar 2023 3:02:04 PM

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வருகிற 19-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்" மிதமான மழை பெய்யக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று வருகிற 20-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rainfall,chennai zonal meteorological centre ,மழை , சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்

இதனை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 4 செ.மீ., சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்). வால்பாறை பிஏபி (கோயம்புத்தூர்). வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சின்கோனா (கோயம்புத்தூர்) தலா 2 செ.மீ., தேவாலா (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நிலகிரி), பெரியார் (தேனி) தலா 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

Tags :