Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்

தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்

By: vaithegi Tue, 02 May 2023 10:50:10 AM

தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னை: இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது . இதனை அடுத்து நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோன்று நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain,heavy rain,tamil nadu ,மழை ,கனமழை ,தமிழ்நாடு

இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் வெப்ப அலைக்கான வாய்ப்பு குறையும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Tags :
|