Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் அடுத்து வரும் சில நாட்கள் மிக கனமழை கொட்டி தீர்க்க வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்து வரும் சில நாட்கள் மிக கனமழை கொட்டி தீர்க்க வாய்ப்பு

By: vaithegi Fri, 03 Nov 2023 2:54:51 PM

தமிழகத்தில் அடுத்து வரும் சில நாட்கள் மிக கனமழை கொட்டி தீர்க்க வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சிதம்பரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 6 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதேபோன்று அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 33.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

இதையடுத்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. எனவே இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும திண்டுக்கல் மாவட்டங்களில மிக கனமழை பெய்யும்.

kanamaza,kanyakumari,tirunelveli,tenkasi,theni and dindigul ,கனமழை ,கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும திண்டுக்கல்

விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற நவம்பர் 9 ம் தேதி வரை பரவலாக பல்வேறு மாவட்டங்களிலும் மழைக்கான எச்சரிக்கை அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இன்றைய அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

Tags :