Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக ஜூலை 4 முதல் 8 வரை மாணவர்களின் கற்றல் திறனை கண்டறிய அடிப்படை கற்றல் திறன் அறிதல் திட்டம் ...செயல்படுத்த திட்டமிடல்

தமிழக ஜூலை 4 முதல் 8 வரை மாணவர்களின் கற்றல் திறனை கண்டறிய அடிப்படை கற்றல் திறன் அறிதல் திட்டம் ...செயல்படுத்த திட்டமிடல்

By: vaithegi Sat, 02 July 2022 12:16:48 PM

தமிழக  ஜூலை 4  முதல்  8  வரை மாணவர்களின் கற்றல் திறனை கண்டறிய அடிப்படை கற்றல் திறன் அறிதல் திட்டம் ...செயல்படுத்த திட்டமிடல்

தமிழகம்: தமிழகத்தில் உள்ள 1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்தியதால் மாணவர்களின் கல்வித்திறன் மிகவும் பாதிப்படைந்துள்ளது.

மேலும், 4 ஆம் வகுப்பு மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் கூட சரியாக எழுத, வாசிக்க தெரியாமல் திணறி கொண்டிருக்கின்றனர். இதனால், மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என திட்டமிடப்பட்டது.

கடந்த 2025 ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி சார்ந்த பள்ளிகள் அனைத்திலும் 3 ஆம் வகுப்பை நிறைவு செய்த மாணவர்கள் பாடங்களை புரிந்து படிக்கவும், எழுதவும், அடிப்படை கணக்குகளை செய்ய தெரிந்திருக்க வேண்டும் என்பதே எண்ணும் எழுத்தும் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

students,learning ability ,மாணவர்கள் ,கற்றல் திறன்

இந்த நிலையில், இத்திட்டத்தின் முதற்கட்டமாக வரும் ஜூலை 4 ஆம் தேதி முதல் ஜூலை 8 ஆம் தேதி வரை மாணவர்களின் கற்றல் திறனை கண்டறிய அடிப்படை கற்றல் திறன் அறிதல் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான புதிய செயல்முறைகளை தொடக்கக்கல்வி இயக்குனர் வழங்கியுள்ளார். மேலும், இந்த கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை சேர்ந்துள்ள மாணவர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் நாளைக்குள் பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வேறு பள்ளிகளில் பயின்றுவிட்டது புதிதாக இந்த பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்கள் EMIS Unique Id எண்ணினை கொண்டு மாணவர்களின் விவரங்களை பதிவு செய்யும்படி என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :