Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாநில உரிமைகளை மத்திய அரசிடம் விட்டுக்கொடுப்பதில் தமிழகம் முதலிடம்- கமல்ஹாசன்

மாநில உரிமைகளை மத்திய அரசிடம் விட்டுக்கொடுப்பதில் தமிழகம் முதலிடம்- கமல்ஹாசன்

By: Monisha Wed, 23 Dec 2020 07:51:56 AM

மாநில உரிமைகளை மத்திய அரசிடம் விட்டுக்கொடுப்பதில் தமிழகம் முதலிடம்- கமல்ஹாசன்

விழுப்புரத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: செங்கல் சூளையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு குடும்பமே அடிமைப்பட்டு கிடக்கும் நிலை இங்குதான் நடந்துள்ளது. இங்கு கொத்தடிமை பிரச்சினை இருக்கிறது, அதுபோல் கந்துவட்டி பிரச்சினையும் இங்குதான் உள்ளது.

வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்தால் எப்படி இருக்குமோ அதுபோன்று தான் இப்போதைய நிலைமையும் உள்ளது. வெள்ளைக்காரர்களை விட சிறந்த தலைவர்கள் வருவார்கள் என்று நம்பிக்கொண்டிருந்தோம், வந்தார்கள். ஆனால் அவர்கள் வெள்ளைக்காரர்களையே மிஞ்சுகிற அளவிற்கு கொள்ளைக்காரர்களாக மாறிவிட்டனர். இவர்கள் அகற்றப்பட வேண்டும். அது உங்களுடைய பலத்தால் மட்டுமே முடியும்.

தென்பெண்ணை ஆற்றில் எல்லாம் மணல் கொள்ளை, அது உங்கள் சொத்து, என் சொத்து, அதில் யாரும் கை வைக்க விடக்கூடாது. அவ்வாறு விட்டால் அது உங்களின் வாழ்வாதார சூழலை தலைகீழாக மாற்றி விடும்.
இந்தியாவிலேயே தமிழகம் நம்பர் 1 மாநிலம் என்றும் அதற்காக விருது வாங்கியுள்ளோம் என்றும் சொல்கிறார்கள். மற்ற ஊழல் மாநிலங்களோடு ஒப்பிட்டுக்கொண்டு பேசுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.

executives,meeting,speech,rule,corruption ,நிர்வாகிகள்,கூட்டம்,சிறப்புரை,ஆட்சி,ஊழல்

உங்களுக்கு முதலிடம் வேண்டும் என்று ஆசை இருந்தால் நான் கொடுக்கிறேன். உங்களுக்கு ஊழலில் முதலிடம், மாநில உரிமைகளை மத்திய அரசிடம் விட்டுக்கொடுப்பதில் முதலிடம், மாணவர்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகும் மாநிலங்களில் முதலிடம், மணல் கொள்ளையில் முதலிடம், இதை உங்கள் ஊரில் இருந்து சொல்வதுதான் சரியாக இருக்கும்.

பெட்ரோல் விலை என்னவாக இருந்தாலும் அது இந்தியாவிற்கு எந்த லாபமும் பயக்காது. நம்மிடம் 84 ரூபாய்க்கு கொடுத்துவிட்டு வெளிநாடுகளுக்கு 34 ரூபாய்க்கு கொடுக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய துரோகம். கிழக்கிந்திய கம்பெனி போல ஆட்சி நடத்தும் இவர்கள் மீது, மேலும் கோபம் வருகிறது.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும்போது இருந்த சிலிண்டர் விலை என்ன? தற்போது சிலிண்டர் விலை என்ன? இன்று மாலை டி.வி.யில் பிரதமர் மோடி தோன்றுகிறார் என்று சொன்னாலே குடிமக்களுக்கு குலைநடுங்கும் என்ற நிலை ஜனநாயக வரலாற்றில் இருந்ததாக நினைவில் இல்லை. அப்படிப்பட்ட ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு வகுக்கப்பட்ட திட்டங்களை திரும்பிப் பார்க்க விருப்பமில்லை.

executives,meeting,speech,rule,corruption ,நிர்வாகிகள்,கூட்டம்,சிறப்புரை,ஆட்சி,ஊழல்

விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், நேர்மையானவர்களை அவர்கள் புறக்கணிக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆட்சி அகற்றப்பட வேண்டும். இதையெல்லாம் எதிர்த்து தமிழகத்தில் இருந்து அழுத்தமாக மக்களின் குரல் ஒலிக்கிறது. நீங்களும் சேர்ந்து குரல் கொடுங்கள். இங்கு எழுச்சி, புரட்சி ஆரம்பித்து விட்டது. அதை நீங்கள் முன்னின்று நடத்துங்கள்.

எங்களை பொறுத்தவரை ஜனநாயகத்தில் மக்கள்தான் நாயகர்கள். நாங்கள் அவர்களது சேவகர்கள். நாங்கள் தேர்ந்தெடுக்கப்போகும் எம்.எல்.ஏ. வேட்பாளர்களிடம் நீங்கள் உங்கள் கடமையை செய்ய தவறினால், மக்களிடம் இருந்து புகார்கள் வந்தால் உடனே தார்மீக குற்ற உணர்வுடன் ராஜினாமா கடிதம் எழுதி கொடுத்துவிட்டு பதவியில் இருந்து நீங்க வேண்டும் என்று சொல்லி ஒப்புதல் கடிதம் வாங்க உள்ளோம். அதற்கு ஒப்புக்கொண்டு தயாரானவர்களே இங்கு தயாராகி நிற்கிறார்கள். அது நடக்கத்தான் போகிறது, நடக்க வையுங்கள் என்று உங்களிடமும் அரசியல்வாதிகளிடமும், அரசியல் புரோக்கர்களிடமும் கேட்கிறேன்.

இது ஒரு எழுச்சி, புரட்சி. இதில் நீங்கள் இணைந்தால் நாளை பெருமைப்படுவீர்கள். நீங்கள் எந்த கட்சியில் இருந்தாலும் விரைவில் எங்களுடன் வந்து இணைவீர்கள். வெற்றி பெறுவதற்காக அல்ல. இந்த நேர்மை எனக்கும் வேண்டும். இது நேர்மையாக, சுயமரியாதையுடன் இருக்கக்கூடிய இடம். இதனால் அவர்களுக்கு தூக்கம் கலைந்துள்ளது. நான் வரும் வழியெல்லாம் தாய்மார்களின் பேராதரவு கிடைத்தது. விவசாயத்தை தொடங்கி விடுங்கள். ஊர்கூடி தேர் இழுத்தால் நாளை நமதே. நிச்சயம் நாளை நமதே என கூறியுள்ளார்.

Tags :
|
|