Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இந்த தேதி வரை நடைபெறும் .. சபாநாயகர் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இந்த தேதி வரை நடைபெறும் .. சபாநாயகர் அறிவிப்பு

By: vaithegi Mon, 20 Mar 2023 3:38:22 PM

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இந்த தேதி வரை நடைபெறும்  ..  சபாநாயகர் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 21-ம் தேதி வரை நடைபெறும் என்றும், மார்ச் 23-ம் தேதி பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கிறது ... 2023 -24ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்ட பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

சட்டப்பேரவையின் இன்றைய அலுவல் பணிகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்ததும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். அப்போது பட்ஜெட் உரைக்கு முன்னரே தங்களை பேச அனுமதிக்க கோரி அதிமுக எம்.எல்.ஏக்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர்.

speaker,tamil nadu legislative assembly ,சபாநாயகர் ,தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்


ஆனால் அதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால், அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேரு துறை சார்ந்த அறிவிப்புகளையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் அறிவித்தார்.

மேலும் பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்ததும், சசபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதனை அடுத்து மார்ச் 23-ம் தேதி பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்குகிறது. பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் மார்ச் 21-ம் தேதி தொடங்கி மார்ச் 27-ம் தேதி வரை நடைபெறும் எனவும், மார்ச் 28-ம் தேதி முதல் பல்வேறு துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :