Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 12-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 12-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்

By: vaithegi Thu, 08 June 2023 2:39:37 PM

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 12-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்

சென்னை: இன்று தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் துவங்கி உள்ளது. மேலும் தென்தமிழக பகுதிகளிலும் பரவி உள்ளது. நேற்று (07.06.2023) காலை 08:30 மணி அளவில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஓட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர புயல் பிப்பர்சாய்” நேற்று காலை 11:30 மணி அளவில் மிக தீவிர புயலாக வலுப்பெற்று, வடக்கு இசையில் நகர்ந்து இன்று (08.06.2023) காலை 08:30 மணி அளவில் மத்திய கிழக்க அரபிக்கடல் பகுதிகளில் கோவாவில் இருந்து மேற்கு தென்மேற்கே சுமார் 850 கிலோமீட்டர் தொலைவில், மும்பையிலிருந்து தென்மேற்கே சுமார் 900 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, வடக்கு - வடமேற்கு திசையில் அடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும். இதனை அடுத்து வெப்ப சலனம் காரணமாக, 08.06.2023 மற்றும் 09.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரி இடங்களில் இடி மின்னதுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

temptation of rain and heat ,மழை ,வெப்ப சலனம்

வருகிற 10.06.2023 முகல் 12:06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை:

மேலும் வருகிற 08.06.2023 மற்றும் 09.06.2023: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; மருசில இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

Tags :