Advertisement

தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும்

By: vaithegi Tue, 01 Aug 2023 10:27:11 AM

தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும்

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதனை அடுத்து நாளை முதல் 6ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது

rain,weather centre ,மழை ,வானிலை மையம்

அதைத்தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

மேலும் அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags :
|