Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

By: vaithegi Tue, 09 May 2023 09:48:34 AM

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

சென்னை: வட தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை உருவாகியது.

இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக மேலும் வலுபெறக்கூடும்.

இதனை அடுத்து இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 11-ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும். அதன் பிறகு வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம் - மியன்மார் கடற்கரை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

rainy,tamil nadu,puducherry,karaikal ,மழை , தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால்

இந்த நிலையில் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 12-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் அத்துடன் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 4 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

Tags :
|