Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று முதல் 15-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

இன்று முதல் 15-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

By: vaithegi Fri, 12 May 2023 10:27:57 AM

இன்று  முதல் 15-ம் தேதி  வரை தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

சென்னை: கடந்த 10-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று "மோகா" புயலாக வலுப்பெற்று போர்ட் பிளேயரிலிருந்து சுமார் 510 கிலோ மீட்டர் மேற்கு- தென்மேற்கே நிலைகொண்டுள்ளது.

இதையடுத்து இது வட-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று இரவு வாக்கில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெறக்கூடும். அதன் பிறகு இன்று காலை முதல் வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி நகர்ந்து இன்று மாலை மிகத்தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.

tamil nadu,puducherry,karaikal,rain , தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால் ,மழை

அதன் பிறகு நாளை மாலை வரை காற்றின் வேகம் படிப்படியாக மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 165 கிலோ மீட்டர் வரை அதிகரித்து, தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்த நிலையில் இன்று முதல் வருகிற 15-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.15ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 4 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.

இதனை அடுத்து வருகிற 14.05.2023 & 15.05.2023 தேதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags :