Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகம் ,புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம் ,புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Tue, 06 June 2023 2:55:30 PM

தமிழகம் ,புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் ......தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்ப சலனம் மற்றும் மேற்கு திசை காற்று காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து இன்று வெப்பநிலை வழக்கத்தை விட 2 – 3 டிகிரி செல்ஸியஸ் வரை உயர கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்கக்கடல் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் காற்று இன்றும் நாளையும் 65 கி. மீ வேகத்தில் வீசக்கூடும்

puducherry,tamil nadu ,மழை,தமிழகம் ,புதுச்சேரி

அதே போன்று வருகிற ஜூன் 7 மற்றும் 8ம் தேதிகளில் குமரிக்கடல், மன்னர் வளைகுடா, அந்தமான் கடற்பகுதிகளில் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று அடுத்த 4 நாட்களுக்கு 65 கி. மீ வேகத்தில் வீசும் எனவே மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது.


Tags :