Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

By: vaithegi Fri, 07 July 2023 3:52:16 PM

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்


சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து வருகிற 08.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வருகிற 09.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

rainy,tamil nadu,puducherry,karaikal ,மழை ,தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால்


வருகிற 10.07.2023 மற்றும் 11.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags :
|