Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகம், புதுச்சேரியில் இன்று இடியுடன் மழை பெய்யக்கூடும்

தமிழகம், புதுச்சேரியில் இன்று இடியுடன் மழை பெய்யக்கூடும்

By: vaithegi Wed, 16 Aug 2023 1:26:36 PM

தமிழகம், புதுச்சேரியில் இன்று இடியுடன் மழை பெய்யக்கூடும்

சென்னை: இன்று இடியுடன் மழைக்கு வாய்ப்பு .... தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

இதனை அடுத்து இதுதொடர்பாக சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-

rainy,tamil nadu,puducherry ,மழை , தமிழகம், புதுச்சேரி


வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (ஆக.16) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 77 டிகிரி முதல் 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags :
|