Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் ஜூன் மாதத்திலிருந்து இன்று வரை வழக்கத்தை காட்டிலும் 10% கூடுதல் மழை பதிவு

தமிழகத்தில் ஜூன் மாதத்திலிருந்து இன்று வரை வழக்கத்தை காட்டிலும் 10% கூடுதல் மழை பதிவு

By: vaithegi Tue, 26 Sept 2023 4:14:53 PM

தமிழகத்தில் ஜூன் மாதத்திலிருந்து இன்று வரை வழக்கத்தை காட்டிலும் 10% கூடுதல் மழை பதிவு

சென்னை: இந்தாண்டு 10%கூடுதல் மழைப்பொழிவு ... தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென் மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து கொண்டு வருகிறது.

இதையடுத்து தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டுடன் ஒப்பிடும் போது அடுத்தடுத்த ஆண்டுகளில் கூடுதல் மழை பதிவாகி கொண்டு வருகிறது.

rain,monsoon ,மழை ,பருவமழை


அந்த வகையில், இந்த ஆண்டிற்கான மழையின் அளவை ஆராய்ந்ததில் வழக்கமான மழையின் அளவை காட்டிலும் இந்தாண்டு 10% கூடுதலாக மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் அறிக்கையினை வெளியிட்டு உள்ளது.

அதாவது, தமிழகத்தில் ஜூன் மாதத்திலிருந்து தற்போது வரை பெய்திருக்கும் மழையின் அளவை கணக்கிட்டதில் 309.2 மில்லிமீட்டருக்கு பதிலாக 338.5 மில்லிமீட்டர் பதிவாகி உள்ளது. மேலும், அடுத்தடுத்த நாட்களில் மழையின் அளவு இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்து உள்ளது.

Tags :
|