Advertisement

தமிழக பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு தொடர்பான அறிவிப்பு

By: vaithegi Wed, 27 July 2022 12:16:53 PM

தமிழக பள்ளி ஆசிரியர்கள்  விடுப்பு தொடர்பான அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டுவரும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தொடக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி போன்றவற்றில் வேலை பார்த்து வரும் ஆசிரியர்களும் விடுப்பு எடுக்க நேரிட்டால் உயர் கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்ற பின்பு தான் விடுப்பு எடுக்க முடியும். தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல் மற்றும் பிற தேவைகளுக்கு எழுத்து மூலமாக உயர் அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும்.

ஆனால், சில சமயங்களில் நேரடியாக விண்ணப்பிக்க முடியாத சூழல் ஒன்று ஏற்படுகிறது. இதனால், ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதை தொடர்ந்து அரசு, அரசு உதவி பெறும், தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் கடந்த மே 25 ஆம் தேதி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் ஒரு கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர்.

leave,school teachers ,விடுப்பு . பள்ளி ஆசிரியர்கள்

ஆசிரியர்கள் நேரடியாக விண்ணப்பிக்கும் முறைக்கு பதிலாக பள்ளிக் கல்வித்துறை செயலி மூலமாக விடுப்பு எடுக்கும் முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அந்த வகையில் TNSED-Schools என்கிற செயலி மூலமாக தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட விடுப்புகளை ஆசிரியர்கள் எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வரும்போது தங்களது வருகை பதிவை பள்ளிக் கல்வித்துறையின் செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து ஊதியமில்லா அசாதாரண விடுப்புக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வி ஆணையரகம் தற்போது பதிலளித்துள்ளது.

Tags :
|