Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகம் பங்கேற்க வலியுறுத்தல்

மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகம் பங்கேற்க வலியுறுத்தல்

By: Nagaraj Thu, 19 Jan 2023 12:04:35 PM

மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகம் பங்கேற்க வலியுறுத்தல்

சென்னை: மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வில் நம் மாணவர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் ஆர்வம் காட்டுவதைப் போல மத்திய அரசு வேலைவாய்ப்புகளிலும் நம் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வில் நம் மாணவர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும்.

அதற்காக மாவட்டந்தோறும் போட்டித்தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகளை அரசு துவங்குகிறது என்று சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முறை வழிகாட்டு மையம் நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் மாணவர்களுக்கான சிறப்புக் கையேடுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் பேசிய அமைச்சர், தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் மட்டும் மாணவர்கள் ஆர்வம் காட்டுவது வருத்தமளிக்கக் கூடிய செய்தியாக உள்ளது என தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

'சுதந்திரம் அடைந்து இந்த நாள் வரை தமிழகத்தில் அரசு ஐ.டி.ஐ.க்களின் எண்ணிக்கை 91 மட்டுமே. கடந்த ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பின் 11 புதிய ஐ.டி.ஐ.க்களை துவங்கியுள்ளோம்.

minister,udayanidhi stalin,competitive examination,special training,classes ,அமைச்சர், உதயநிதி ஸ்டாலின், போட்டித்தேர்வு, சிறப்பு பயிற்சி, வகுப்புகள்

மேலைநாடுகளில் தரப்படும் கல்வியைப் போன்று தமிழக மாணவர்கள் பெறும் வகையில் டாடா கன்சல்டன்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ஐ.டி.ஐ.க்கும் 30 கோடிக்கும் மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு ஐ.டி.ஐ.க்களில் இந்தாண்டு சேர்க்கை 94 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தமிழக மாணவர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் காட்டுவதில்லை. இது மிக வருத்தம் அளிக்கக்கூடிய செய்தி. தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் 2% பேர் தான் மத்திய அரசின் போட்டித்தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுகிறார்கள் என்று புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைவிட வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாகப் பணிபுரிவதற்கு காரணம் நம் மாணவர்கள் மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்காமல் தவிர்ப்பதுதான். நாமும் கலந்துக்கொண்டு மத்திய அரசில் பணிபுரிய வேண்டும். அதற்காக நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதனை நாம் உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்கிற உயரிய நோக்கில் மத்திய அரசுப் பணிகளுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் போட்டித்தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகளை அரசு துவங்குகிறது என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags :